×

ரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தின்போது, அந்நிறுவன பங்குகளின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஆயிரத்து 581 ரூபாயாக உயர்ந்தது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 26% அதிகரித்துள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 2018 ஆகஸ்டில் 8 லட்சம் கோடியை கடந்தது அப்போது இந்திய நிறுவனம் கடந்த சந்தை மதிப்பில் சாதனையாக இருந்தது. தற்போது அச்சாதனையின் அளவை மேலும் ரிலையன்ஸ் அதிகரித்துள்ளது.

பேங்க்  ஆப் அமெரிக்கா  மெரில் லிஞ்ச் என்ற நிதி அமைப்பின் கணிப்புப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணை முட்டும் வகையில் 140 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டும் என்று தெரிவித்துள்ளது. சிறியளவிலான மளிகை கடை வர்த்தகத்தில் அந்நிறுவனம் ஈடுபட உள்ளதே இதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சாதனையை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் 6- வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்தது. இதன் மூலம், 59.4 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12- வது இடத்திற்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

Tags : company ,Indian , Reliance , first Indian company , reach a market , Rs 10 lakh crore
× RELATED புதுக்கோட்டையில் சமையல் எரிவாயு...